Published : 30,Oct 2017 05:10 AM
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பெண்கள் கோஷம்

பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக ஃபிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிஸில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்று திரண்டு கோஷமிட்டனர்.
வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு நீதி வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு இணையதளத்திலிருந்து போராடுவதை விட களத்தில் இறங்கி போராடுவதே சிறந்தது என்றும் அப்பெண்கள் கோஷம் இட்டனர். பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளான பெண்கள் மி டூ என்ற சுட்டுப் பெயரில் பெயரில் சமூக தளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இப்போராட்டம் நடைபெற்றது