Published : 30,Oct 2017 03:17 AM
சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும்: மாவட்ட ஆட்சியர்

சென்னையில் இன்று கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அருகே நிலைக்கொண்டுள்ள மேலடுக்கு வளிமண்டல சுழற்சியால், தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் நேற்று மாலை முதல் இருந்து விட்டு விட்டு பெய்த மழை இரவில் வெளுத்து வாங்கியது. தொடர்ந்து இன்றும் கிண்டி, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், சேப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.