Published : 29,Oct 2017 04:04 PM

பறவை மோதியதால் தொழில்நுட்பக் கோளாறு: ஏர் அரேபியா விமானம் ரத்து

air-arabia-flight-from-coimbatore-cancelled-due-to-technical-issue

கோவையிலிருந்து ஷார்ஜா செல்லும் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணிகள் நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

கோவையிலிருந்து ஷார்ஜா புறப்பட வேண்டிய விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் இயக்கப்படவில்லை. இதனால் 163 பயணிகளும் கோவை புலியகுளம் ‌மற்றும் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்‌பட்டுள்ளனர். ஷார்ஜாவிலிருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானம் மீது பறவை மோதியதால், அதில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஹக்கீம் என்ற தேடப்பட்டு வந்த நபரும், வரதட்சணை வழக்கில் தேடப்பட்டு வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு‌ ‌என்பவரும் விமான நிலைய குடியேற்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்