[X] Close

நெல்லை ஆட்சியர் அலுவகத்தில் நுழைய கட்டுப்பாடுகள்

Nellai-collector-office-entrance-change-strictly

தீக்குளிப்பு சம்பவத்தை அடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


Advertisement

கடந்த வாரம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர், கந்து வட்டி கொடுமையால் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதையடுத்து 4 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அத்துடன் கந்துவட்டி தொடர்பான பல்வேறு புகார்களும், அதன்மூலம் சட்டவிரோதமாக கிட்னி விற்கப்படும் சம்பவங்களும் வெளிவந்தன.

இந்நிலையில் தீக்குளிப்பு சம்பவத்தின் எதிரொலியாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே செல்லும் 9 வாயில்களில், 7 நுழைவாயில்கள் அடைக்கப்படுகின்றன. அத்துடன் உள்ளே வருபவர்களை உரிய முறையில் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close