நாகை மாவட்டம் நாகூரில் டெங்கு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, சுகாதாரமற்ற பகுதிகளை உடனடியாக சுத்தம் செய்ய அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் இலவசமாக குப்பைக்கூடைகள் வழங்கி, மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாகூரில் பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் இலவச குப்பை கூடைகளை நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி வழங்கினார். நாகூர் குஞ்சாலி மரைக்காயர் தெரு, நாகூர் கடைதெரு, சிவன் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக குப்பை கூடைகள் வழங்கப்பட்டன. மேலும், மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிரிப்பது எப்படி என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. டெங்கு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக தொற்று நோய் ஏற்படுத்தும் விதமாக உள்ள இடங்களை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சுத்தம் செய்ய நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix