உத்தரபிரதேசத்தில் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார். இவர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். இவர் கோண்டா மாவட்டத்தின் பரஸ்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, காரில் சென்று கொண்டிருந்தார். அவருடன் பாதுகாப்பு வாகனங்களும் உடன் சென்றன. அப்போது அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனை கண்டதும் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மகன் மீது மோதிவிட்டு கார் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டதாக பலியான சிறுவனின் தந்தை தெரிவித்தார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்த முதலமைச்சர் யோகி, விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!