
மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
உசிலம்பட்டியைச் சேர்ந்த அம்மாப்பிள்ளை என்ற பெண் கடந்த 23-ஆம் தேதி வாகன விபத்தில் படுகாயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளித்தும், அவர் மூளைச்சாவு அடைந்ததால் அவரது குடும்பத்தினர் சம்மதத்துடன், அம்மாப்பிள்ளையின் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்படி, ஒரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவமனைக்கும், ஒரு கல்லீரல் திருச்சி தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. மேலும் ஒரு சிறுநீரகம் மற்றும் இரண்டு கண்கள் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.