உலகக்கோப்பை கால்பந்து: பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை

உலகக்கோப்பை கால்பந்து: பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை
உலகக்கோப்பை கால்பந்து: பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை

இந்தியாவில் நடைபெற்ற பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்தது. 

பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைப்பெற்று வந்தது. பிரேசில்-மாலி அணிகளுக்கு இடையேயான மூன்றாவது இடத்துக்கான போட்டியின் போது இந்தச்சாதனை நிகழ்த்தப்பட்டது.  கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த போட்டியை 56 ஆயிரத்து 432 பேர் நேரில் கண்டுரசித்தனர்.இதற்கு முன் சீனாவில் 1985-ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் உலகக்கோப்பை போட்டியை 12 லட்சத்து 30 ஆயிரத்து 976 பேர் கண்டுகளித்தனர். அந்தச்சாதனையை இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டி முறியடித்துள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com