ஜோடி புறாக்களை பறக்கவிட்டு காதலர் தின கொண்டாட்டம்

ஜோடி புறாக்களை பறக்கவிட்டு காதலர் தின கொண்டாட்டம்
ஜோடி புறாக்களை பறக்கவிட்டு காதலர் தின கொண்டாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் காதலர் தினத்தை முன்னிட்டு அப்பகுதி இளைஞர்கள் புறாக்களை பறக்க விட்டும், இனிப்புகளை பரிமாறியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் காதலை ஆதரித்தும், வாழ்த்துக்களை தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் இந்நிகழ்வு குறித்து இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் உச்சிமாகாளி கூறுகையில், சாதி,மதங்களைக் கடந்து காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் நடக்கக்கூடிய சாதிய வன்கொடுமைகள்,கௌரவக்கொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக காதலர் தினத்தை பொதுமக்கள் கூடும் இடங்களில் கொண்டாடி வருகிறோம் என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com