
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அதிமுக மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்னும் சற்று நேரத்தில் பெங்களூரு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக டெல்லியில் புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய தம்பிதுரை, உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.