[X] Close

மகளிர் ஆசியக் கோப்பை: சிங்கப்பூரை பந்தாடிய இந்தியா

The-Indian-Women-s-Team-with-a-perfect-10-against-Singapore

மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியை இந்திய அணி வெற்றியுடன் தொடக்கியுள்ளது. 

மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. காகாமிஹரா நகரில் நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி சிங்கப்பூரை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனைகள் எதிரணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பே வழங்கவில்லை. இந்தப் போட்டியில் இந்திய அணி 10-0 என்ற கோல்கள் கணக்கில் சிங்கப்பூர் அணியை தோற்கடித்தது. இந்தியா தரப்பில் நவ்நீத் கவுர், ராணி, நவ்ஜோத் கவுர் ஆகியோர் தலா இரண்டு கோல்கள் அடித்தனர். அடுத்த ஆட்டத்தில் சீன அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close