[X] Close

ஏகே 47 துப்பாக்கியுடன் காவலர்: பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாக தகவல்

police-became-terrorist-in-jammu-and-kashmir

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் காட்சியளிக்கும் படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் பணிபுரியும் இஷ்ஃபாக் அகமது என்ற அந்தக் காவலர் தற்போது விடுப்பில் உள்ளார். விடுப்பு முடிந்து கடந்த 23ஆம் தேதியே பணிக்கு திரும்பியிருக்க வேண்டிய அவர், இதுவரை வரவில்லை எனக் கூறப்படுகிறது. காவலர் இஷ்ஃபாக், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவிட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. அவர் ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் காட்சியளிக்கும் படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.


Advertisement

Advertisement
[X] Close