Published : 28,Oct 2017 01:19 PM
இடிந்து விழும் நிலையில் பள்ளி கழிப்பறை: அச்சத்தில் பெற்றோர்கள்

நீலக்கிரியில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை இடிந்து விழுதும் நிலையில் இருப்பதால் பெற்றோர்கள் அச்சத்துடன் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ளது அத்திப்பாளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இந்த பள்ளியில் உள்ள மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை ஒருவித அச்சத்துடன் தினமும் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் சுவர்கள் விரிசல் விட்டு மோசமான நிலையில் உள்ள கழிவறையைத்தான் பள்ளி மாணவர்கள் தினமும் யன்படுத்துகின்றனர். இந்த கழிவறையால் விபத்து நேரிடும் முன்னரே இதனை சரிசெய்ய வேண்டும் என்று பெற்றோரும் அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.