[X] Close

சோனியா நலமாக இருக்கிறார்: ராகுல்காந்தி 

Sonia-is-fine--Rahul

டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி நலமாக இருப்பதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கடந்த சில மாதங்களாக உடல் நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார், இதனால் அவர் ஓய்வு எடுப்பதற்காக இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்தார். ஆனால் அங்கு அவருக்கு ஏற்பட்ட வயிறு உபாதைகள் காரணமாக சோனியா டெல்லிக்கு புறப்பட்டு வந்து, நேற்று மாலை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். 

இங்கு சோனியாவிற்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கபட்டு வருகிறது. மேலும் அவர் மருத்துவமனையில் இருந்து விரைவில் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று கட்சி தலைவர்கள் பலர் தங்களின் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி துணை தலைவரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, சிம்லாவில் இருந்த தனது தாயாருக்கு வயிற்று உபாதை ஏற்பட்டது என்றும் இதனால் அவர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார். ராகுல் தனது ட்விட்டர் பதிவில், தனது தாயார் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் காட்டிய அன்பிற்கு மிகப்பெரிய நன்றி என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close