Published : 14,Feb 2017 02:42 PM

ஆளுநரை சந்தித்தார் அதிமுக எம்.பி மைத்ரேயன்

ADMK-MP-Maitreyan-meets-TN-Governor

அதிமுக எம்.பி மைத்ரேயன், முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இந்நிலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக எம்.பி மைத்ரேயன், முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசியுள்ளனர். ஆனால் மைத்ரேயன் ஆளுநரிடம் எது குறித்து பேசினார் என்ற தகவல் வெளியாகவில்லை.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்