[X] Close

தொழில்முறை போட்டிகளிலிருந்து சோம்தேவ் ஓய்வு

Somadev-Devvarma-retiring-from-pro-tennis

தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள சோம்தேவ், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 2010-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வென்ற பெருமைக்குரியவர். டேவிஸ் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக 14 போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார். தேசிய அளவில் விளையாட்டுத்துறையினருக்கு வழங்கப்படும் இரண்டாவது பெரிய விருதான அர்ஜூனா விருதையும் பெற்றுள்ளார். 31 வயதாகும் சோம்தேவ் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்.


Advertisement
Related Tags : india protennis somdev devvarman tennis
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close