Published : 28,Oct 2017 02:01 AM

ரஜினியின் '2.0' ஆடியோ வெளியீடு

Rajinikanth-2-0-audio-released

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள '2.0' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முதல்கட்டமாக 2 பாடல்கள் வெளியிடப்பட்டன.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் ‘2.0’. ஏ.ஆர். ரகுமான் இசையில் பிரமாண்டமாக தயாராகி உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய '2.0' ஆடியோ வெளியிட்டு விழாவில், முதல்கட்டமாக 2 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அப்பாடல்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில், புகழ்பெற்ற பாம் ஜுமேரியா ஓட்டலுக்கு மேல், ஸ்கை டைவிங் வீரர்கள் '2.0' படத்தின் விளம்பர பேனரை ஏந்தியபடி சாகசத்தில் ஈடுபட்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்