கென்ய அதிபர் தேர்தலில் 48% வாக்குப்பதிவு: எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் வன்முறை

கென்ய அதிபர் தேர்தலில் 48% வாக்குப்பதிவு: எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் வன்முறை
கென்ய அதிபர் தேர்தலில் 48% வாக்குப்பதிவு: எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் வன்முறை

கென்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் 48 சதவி‌கித வாக்குகள் பதிவாகி இருப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடந்த தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டதால் அதிபர் கென்யட்டாவின் வெற்றி செல்லாது என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது. மறுதேர்தல் நடந்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி நேற்று கென்யா முழுவதும் மீண்டும் மறுதேர்தல் நடத்தப்பட்டது. 

தேர்தல் முறைகளில் சீர்த்திருத்தம் மேற்கொள்ளாததை கண்டித்து இந்தத் தேர்தலை எதிர்க்கட்சித் தலைவர் ஒடிங்கா புறக்கணித்தார். இதனால் எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் நிறைந்த கிஷுமு, ஹோமா‌பே, மிகோரி, சியா ஆகிய 4 தொகுதிகளில் வன்முறை வெடித்தது. இதைத் தொ‌டர்ந்து அந்த தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு  ஒத்தி வைக்கப்பட்டது. பிற தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவில் 48 சதவிகித வாக்குகள் பதிவாகி‌ இருப்பதாக தேர்தல் ஆணை‌யர் வஃபுலா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com