Published : 27,Oct 2017 01:11 PM

தஞ்சையில் விவசாயிகள் உமி உண்ணும் போராட்டம்

Farmers-protest-in-Tanjore-collector-office

விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த தஞ்சை விவசாயிகள் கழுத்தில் கோரை இலைகளைக் கட்டிக்கொண்டு உமி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள், தஞ்சை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்கவில்லை என்றும், கால்வாய்களை தூர்வாராததால் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 25 நாட்கள் ஆன நிலையிலும் இதுவரை கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மேலும் கூட்ட அரங்கிலேயே அமர்ந்து போராட்டம் செய்த விவசாயிகள் கழுத்தில் கோரை இலைகளைக் கட்டிக்கொண்டு உமி உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இப்பிரச்னைகளுக்கு 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்