Published : 14,Feb 2017 11:42 AM

வாக்கெடுப்பே சரியான தீர்வு... ஹெச்.ராஜா

TN-Governor-should-conduct-floor-test--says-H-Raja

சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்துவதே சரியான தீர்வாக அமையும் என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்திய நாளில் இருந்தே, தமிழக அரசியல் களம் ஒவ்வொரு நாளும் பல அதிரடியான நிகழ்வுகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்துவதே சரியான தீர்வாக அமையும் என தெரிவித்துள்ளார். மேலும், கூவத்தூரில் இருந்து போலீஸார் மூலம் எம்எல்ஏக்களை விடுவிக்க வேண்டும் எனக் கூறிய அவர், தமிழக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்