
மெர்சல் திரைப்பட வெற்றிக்கு பாரதிய ஜனதாதான் காரணம் என்றால் விஜயும் அவரது தந்தையும் தங்களுக்கு ன்றி சொல்ல வேண்டும் என பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறினார்.
மெர்சல் சர்ச்சை அந்த படத்திற்கு விளம்பரமாக அமைந்ததாக கூறப்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த எச்.ராஜா, ஒருகால் மெர்சல் வெற்றிக்கு அதிகமாக நானோ அல்லது பாஜகவோ காரணம் என்று நினைத்தால் விஜய் ஒரு நன்றி அறிக்கை கொடுப்பார் என்று கருதுகிறேன். மெர்சல் வெற்றிக்கு நான் காரணமாக இருந்தால் நன்றி சொல்ல வேண்டுமில்லையா? விஜய் சொன்னாலும் சரி அல்லது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நன்றி சொன்னாலும் சரி என்று சிரித்துக்கொண்டே கூறினார்.