
சென்னை வளசரவாக்கத்தில் சக நண்பர்களுடன் டிவி சேனல் பார்ப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், திரைப்பட உதவி இயக்குநர் அடித்து கொலை செய்யபட்டார்.
சென்னை வளசரவாக்கம் கைகான்குப்பம் வி.ஓ.சி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திண்டுக்கல்லை சேர்ந்த அகில் கண்ணன் வசித்து வந்தார். இவர் சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார். இவருடன், கார்த்திக் உட்பட மேலும் 6 உதவி இயக்குநர்களும் அந்த குடியிருப்பில் தங்கியிருந்தனர். இந்த நிலையில், டிவி சேனல் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் அகில் கண்ணனை, கார்த்திக் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் கார்த்திக்கை கைது செய்துள்ளனர். மற்ற உதவி இயக்குநர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.