பேனருக்கு நீதிமன்றம் தடைவிதித்திருப்பது தமிழக அரசியலில் உடனே நடைமுறைப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான் என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், “எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு கவனம் செலுத்துவது போல் மற்ற விவகாரங்களிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். கந்து வட்டி பிரச்னைகளை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.” என்று கூறினார்.
அத்துடன் பேனர் வைக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை, “நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்த பின்பு அதை யாராக இருந்தாலும் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்று ஒரு சூழ்நிலை இருக்கிறது. ஆனால் அரசியலில் திடீரென்று இப்படி ஒரு மாற்றத்தை ஏற்றுக்கொள்வது அரசியல் கட்சிகளுக்கு கடினமான ஒன்று என்பதே எதார்த்தமான உண்மை. ஆனால் யாராக இருந்தாலும் அதை பின்பற்றுவதுதான் சரியாக இருக்கும். இருப்பினும் அதை தமிழக அரசியலில் உடனே நடைமுறைப்படுத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்