[X] Close

கடைமடைக்கு மேட்டூர் அணை நீர் வரவில்லை: விவசாயிகள் வேதனை

Mettur-Dam-Water-Issue--Nagai-Farmers-Suffer

மேட்டூர் அணை நீர், கடைமடைப் பகுதிக்கு வராததால் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


Advertisement

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 2 ஆம் தேதி பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்ட நீரை நம்பி நாகை மாவட்டம் சீர்காழி உள்ளிட்ட கடைமடை பகுதிகளில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நெற்பயிர்கள் கருகுவதற்குகள், தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், பாசன வாய்க்கால்கள் புதர் மண்டி காணப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close