[X] Close

திருமலையில் சிறப்பு வரவேற்பு அறை திறப்பு

Tirupathi-Temple-Waiting-Hall-has-Opened

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்காக 3.5 கோடி ரூபாய் மதிப்பில் வரவேற்பு அறை கட்டப்பட்டுள்ளது. 


Advertisement


திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்காக வைகுண்டம் காம்பளக்ஸ் இரண்டின் அருகே, விமான நிலையத்தில் உள்ளது போல் சிறப்பு வரவேற்பு அறை கட்டப்பட்டுள்ளது. இதனை செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிங்கால், பக்தர்களின் கருத்துகளை கேட்டு அதற்கு ஏற்ப பக்தர்களின் வசதிகள் மேம்ப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கும் ரூ 3.5 கோடியில் வரவேற்பு அறை கட்டப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்பு கவுண்டரில் வைத்துவிட்டு பால், டீ, பெற்று கொண்டு பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 16 கவுண்டர்களில் லட்டு டிக்கெட் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 2000 பக்தர்கள் தள்ளு முள்ளு இல்லாமல் செல்லலாம். மேலும் டிசம்பர் மாதம் முதல் டைம் ஸ்லாட் முறையில், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார். 
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close