
சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா விரும்பியதே இல்லை எனவும், 30 ஆண்டுகாலமாக ஜெயலலிதா ஏமாற்றப்பட்டார் எனவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்ததுடன், அவர்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தண்டனையையும் உறுதி செய்தது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்துள்ளதாக தெரிவித்தார். சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா விரும்பியதே இல்லை எனக் கூறிய தீபா, 30 ஆண்டுகாலமாக ஜெயலலிதா ஏமாற்றப்பட்டார் எனவும் கூறினார். தனக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நன்றியையும் தீபா தெரிவித்தார்.