Published : 14,Feb 2017 07:52 AM
கூவத்தூர் செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக எம்எல்ஏக்களை சந்திக்க கூவத்தூர் தனியார் விடுதிக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செல்கிறார்.
ஓ.பன்னீர்செல்வத்துடன், அவருக்கு ஆதரவாக உள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மற்றும் எம்பி மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக எம்பிக்களும் உடன் செல்கின்றனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எம்எல் ஏக்களை நேரில் சந்தித்து நிலையை விளக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், கூவத்தூரில் அடைத்துவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார். அங்குள்ள எம்எல்ஏக்களில் சிலர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிக்க இருப்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவருவதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.