[X] Close

தமிழிசை மீது சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து: போலீசார் விசாரணை

Police-starts-investigation-in-social-media-comments-on-Tamilisai

பாஜக மாநிலத் தலைவர் தமிழி‌சை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு, ஆபாச கருத்து தெரிவித்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான வசனங்களுக்கு தமிழக பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் இந்த பிரச்சனையை எழுப்பியவர் தமிழிசை. பின்னர், ஹெச்.ராஜா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து மெர்சலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய சில காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்தி பேசினர். 

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு எதிராக ஆபாசமாக கருத்து பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் பாஜகவினர் இன்று மனு அளித்தனர். மனுவை ஏற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூறியதால், குடும்பத்தினருடன் கூட பேச முடியாத வார்த்தைகளால் தொலைபேசி வழியே தொடர்ந்து திட்டுவதாக தமிழி‌சை சவுந்தரராஜன் இன்று தெரிவித்து இருந்தார்.


Advertisement

Advertisement
[X] Close