Published : 25,Oct 2017 01:48 PM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பில் தொடர்ந்து இழுபறி

RK-Nagar-By-Election-date-announcing-delay-by-Election-Commission

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்றும் அறிவிக்கவில்லை. 

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதையடுத்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தல் பண விநியோகம் உள்ளிட்ட புகார்களால் ரத்து செய்யப்பட்டது. உகந்த சூழல் வரும் போது ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து வந்தது. இறுதியில் ஆர்.கே.நகருக்கு டிசம்பர் 31க்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையமும் கூறியது.

ஏற்கனவே இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதியை, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அச்சல்குமார் ஜோதி அறிவித்தார். அப்போது, பிற மாநில இடைத்தேர்தல்களுடன் ஆர்.கே.நகருக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று அச்சல்குமார் ஜோதி தெரிவித்தார். டிசம்பர் 31-ம் தேதிக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் தேதியை அறிவிக்காமல் தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்