[X] Close

மெர்சல் ஆதரவுக்கு விஜய் நன்றி

mersal-success-thanks-for-actor-vijay

மெர்சல் வெற்றிக்கும் அந்தப் படத்திற்கு வந்த எதிர்ப்புகளுக்கு பதில் கொடுத்தும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள நன்றி கடிதத்தில் “மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுகளுடன், நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாபெரும் வெற்றியைந்துள்ள இந்தப் படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன. இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகை சார்ந்த நண்பர்களான நடிகர்கள், நடிகைகள்,இயக்குநர்கள், திரையுல அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட்ட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், ஊடக நண்பர்கள், ரசிகர், ரசிகைகள் எனக்கும் மெர்சல் படக்குழுவினருக்கும் ஆதரவு தந்தார்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close