Published : 25,Oct 2017 11:03 AM
ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 வரை நீட்டிப்பு

அரசின் சமூக நலத்திட்டங்களுக்கு ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேஸ் மானியம் உள்ளிட்ட அரசின் பொது நலத்திட்டங்களின் பயனை பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையின் போது, சமூக நலத்திட்டங்களுக்கு ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார். ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில் மத்திய அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது.