தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் 300 ஆய்வக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் வார்டு மற்றும் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டவர்களின் வார்டுகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அப்போது சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களுக்கு அமைச்சர் சில ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கால்கோல் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன், விஜயபாஸ்கரும் பங்கேற்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், கடந்த மாதத்தில் 1,113 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மறுநாள் 350 மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் கூடுதலாக 744 சிறப்பு மருத்துவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அவர்களும் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறினார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் 300 ஆய்வக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!