பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே முதலில் ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள், தமிழிசையை கண்டித்து அவரது உருவப்பொம்மையை எரித்தனர். இதையடுத்து திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச்சென்றனர். மெர்சல் திரைப்பட விவகாரத்தில் விஜயை வளைத்துப்போட பாரதிய ஜனதா முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார். இதனை மறுத்துப் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், திருமாவளவன் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக விமர்சித்திருந்தார். இதனால் மெர்சல் யுத்தம், பாஜக - விசிக யுத்தமாக மாறி தொடர் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூறியதால், குடும்பத்தினருடன் கூட பேச முடியாத வார்த்தைகளால் தொலைபேசி வழியே தொடர்ந்து திட்டுவதாகவும், தமிழகத்தில் எதிர்கருத்து கூறினால் இதுதான் நிலையா என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix