[X] Close

இன்று 2வது ஒருநாள் போட்டி: வரலாற்றை மாற்றுமா நியூசிலாந்து?

The-2nd-ODI-against-New-Zealand-at-Pune

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாடவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் புனேவில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மதியம் ஒன்றரை மணியளவில் தொடங்குகிறது.

முதல் போட்டியில் வாங்கிய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது. மறுபுறம், இந்திய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றும் வேகத்துடன் நியூசிலாந்து அணி இருக்கிறது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் தனது வரலாற்றை மாற்றி எழுதும். இதனால் இன்றைய போட்டி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close