[X] Close

தேனியில் கந்துவட்டி கொடுமையால் தாய், மகன் தற்கொலை முயற்சி

Mother-and-son-suicide-attempt-in-theni-for-usury-problem

தேனியில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட தாயும், மகனும் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தீக்குளிக்க முயன்றனர்.


Advertisement

தேனி மாவட்டம் குமணன் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவர், பாண்டி என்ற நபரிடம் 2010-ஆம் ஆண்டு 50,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கடனுக்கான வட்டியாக இதுவரை ஒரு லட்சத்து 60,000 ரூபாய் முருகேசன் செலுத்திய நிலையில், குடியிருந்த வீட்டையும் பாண்டி எழுதி வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே முருகேசன் உயிரிழந்த நிலையில், அவரது மகனும் கூடுதலாக 60,000 ரூபாயை பாண்டியிடம் கொடுத்துள்ளார். அப்போதும், வீட்டு பத்திரத்தை கொடுக்காத பாண்டி கூடுதல் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் முருகேசனின் மனைவி மற்றும் மகன் இன்று தேனி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கந்துவட்டி புகார் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement

நெல்லையில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். இவர்களில் ஒரு பெண், அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். பெண்ணின் கணவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.


Advertisement

Advertisement
[X] Close