Published : 24,Oct 2017 12:37 PM

தமிழிசை தனிப்பட்ட வகையில் விமர்சிப்பது ஏன் என தெரியவில்லை: தொல்.திருமாவளவன்

Thirumavalavan-questions-to-tamilisai-soundararajan

மெர்சல் திரைப்பட விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியை விமர்சனம் செய்ததற்கு, தமிழிசை தனி மனித தாக்குதல் நடத்துவதற்கான காரணம் தெரியவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், " பாரதிய ஜனதா கட்சியின் மீது எனது விமர்சனத்தை வைத்தேனே தவிர தமிழிசை மீது தனிப்பட்ட முறையில் எந்த விமர்சனத்தையும் நான் வைக்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து தனிப்பட்ட முறையில்,ஆதாரம் இல்லாமல் என் மீது அவதூறுகளை பேசிவருவது ஏன் என விளங்கவில்லை. அவரும், அவரது கணவரும் எனக்கு மிகவும் அறிமுகமானவர்கள். ஆகவே இதற்கு மேல் இந்த விஷயத்தில் எந்த கருத்தையும் கூற நான் விரும்பவில்லை" என்றார்.

மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்து இடம் பெற்றுள்ள வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம், நடிகர் விஜயை தங்கள் பக்கம் இழுக்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக திருமாவளவன் விமர்சித்திருந்தார். அதற்கு பதில் அளித்த தமிழிசை சவந்தரராஜன், திருமாவளவன்தான் அதுபோன்ற கட்டப் பஞ்சாயத்துகளை செய்வதாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழிசையை எதிர்த்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். கரூரில் நடைபெற்ற போராட்டத்தின் போது பாஜகவினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்