[X] Close

ரயிலில் ஓசி பயணம் போலீசாருக்கு அபராதம்: தெற்கு ரயில்வே அதிரடி

Southern-Railways--Warns-Police

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் போலீசாருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஜிபி, சென்னை காவல் ஆணையருக்கு தெற்கு ரயில்வே எழுதியுள்ள கடிதத்தில், ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் காவல்துறையினருக்கு ரயில்வே விதிப்படி அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவு, மின்சார ரயில்களில் காவல்துறையினர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகளின் புகாரை அடுத்து இந்த நடவடிக்கையை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close