[X] Close

டெங்குவிற்கு சிகிச்சை பெற்ற 31 பேர் குணமாகி வீடு திரும்பினர்

31-people-discharged-after-dengue-treatment-in-Nagai

டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 


Advertisement

டெங்கு மற்றும் இதர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கடந்த சில வாரங்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில், நாகை அரசு தலைமை மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 31 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 

இந்தத் தகவலை மருத்துவமனைகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள முதன்மை கல்வித்துறை செயலர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார். நாகை அரசு மருத்துவமனையில் சுனில் பாலிவால் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேசிய அவர், தற்போது பூம்புகா‌ர் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற சிறுமிக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இனிவரும் மழைக்காலங்களில் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்றும் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுனில் பாலிவால் தெரிவித்தார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close