[X] Close

ஜெ. வீடு நினைவிடம் ஆகுமா?: தீபா வழக்கு முடிவுக்கு வந்தது

jayalalitha-poes-garden-house-case-status

 
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. 

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அவரின் அண்ணன் மகள் தீபா தொடர்ந்த வழக்கு நீதிபதி ரவிசந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் சொத்துகள் மீது தங்கள் அனுமதியின்றி முடிவு எடுக்கக்கூடாது என தீபா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றும் முடிவை பரிசீலனை செய்யவேண்டும் என தமிழக அரசிடம் அளித்துள்ள மனு மீது நடவடிக்கை இல்லை எனவும் கூறப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், தீபாவின் மனுவை தமிழக அரசு பரிசீலனை செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதனை அடுத்து 4 வாரத்தில் தீபாவின் மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close