Published : 23,Oct 2017 05:29 AM

சென்னையில் பெண்ணை தாக்கி 11 சவரன் நகை பறிப்பு

Robbery-from-women-in-chennai

சென்னை கொளத்தூர் பகுதியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணை தாக்கி தங்க நகையை பறித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை கொளத்தூர் நேர்மை நகரைச் சேர்ந்த நாராயணன் என்பவர் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், நாராயணன் ஓட்டிவந்த பைக்கை இடித்து கீழே தள்ளிவிட்டு அவரது மனைவி கழுத்தில் கிடந்த 11 சவரன் தங்க நகையை அறுத்துக் கொண்டு தப்பியோட முயன்றனர். அப்போது மனைவி லலிதா அவர்களைப் பிடிக்க முயற்சித்தபோது, அவரை சரமாரியாக தாக்கிய அந்த கொள்ளையர்கள் பைக்கில் ஏறி தப்பியோடி விட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்