Published : 23,Oct 2017 02:58 AM

டு பிளிசிஸ் காயம்: டி20 தொடரில் இருந்து விலகல்!

Du-Plessis-injury-mars-SA-claiming-whitewash

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன், டு பிளிசிஸ் நேற்று காயமடைந்தார்.

தென்னாப்பிரிக்கா- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 3 வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கிழக்கு லண்டனில் உள்ள பஃபல்லோ பார்க்கில் நேற்று நடந்தது. இதில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 369 ரன்கள் குவித்தது தென்னாப்பிரிக்க அணி. பின்னர் ஆடிய பங்களாதேஷ் அணி, 169 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை அடுத்து ஒரு நாள் போட்டித் தொடரையும் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது. 
முதலில் பேட்டிங் செய்தபோது தென்னாப்பிரிக்க கேப்டன், டு பிளிசிஸ் 91 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் மூலம் வெளியேறினார். காயம் இன்னும் குணமாகாததால் அடுத்த நடக்க இருக்கும் டி20 தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்