[X] Close

குஜராத்தில் மோடி படகு பயணம்: 350 கி.மீ. தூரம் 31 கி.மீட்டராக குறைப்பு

PM-Modi-inaugurates-Ro-Ro-ferry-service-in-Gujarat

குஜராத்தில் கோகா மற்றும் தாகெஜ் இடையே படகுப் போக்குவரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, படகில் பயணம் மேற்கொண்டார்.

ரோல் ஆன், ரோல் ஆஃப் என்பதன் சுருக்கமாக ரோ ரோ என்ற பெயரிலான இந்த படகு சேவையால் 350 கிலோ மீட்டர் பயண தூரம், 31 கிலோ மீட்டராகக் குறைகிறது. கம்பத் வளைகுடா பகுதியின் ஒருபுறமான கோகோவில் இருந்து மறுபுறமான தாகெஜ்ஜுக்கு செல்வதற்கு சாலை மார்க்கமாக 350 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. படகு போக்குவரத்தால் பவநகரில் இருந்து சூரத் நகருக்கும் பயண தூரம், நேரம் குறையவுள்ளது.

குஜராத்தில் நீர்வழிப் போக்குவரத்தை தொடங்கி வைத்துப் பேசிய மோடி, தான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, மாநில வளர்ச்சிக்காக கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்த விடாமல் காங்கிரஸ் முட்டுக்கட்டை ஏற்படுத்தி வந்ததாக குற்றம்சாட்டினார். எனினும், மக்கள் ஆதரவுடன் குஜராத் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றதாகவும், அதே முட்டுக்கட்டை மனப்பான்மையை மத்தியிலும் காங்கிரஸ் காட்டி வருவதாகவும் மோடி தெரிவித்தார்.


Advertisement

துறைமுகங்கள்தான் நாட்டின் செழிப்புக்கு முக்கிய நுழைவாயிலாக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். தாகெஜ் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முக்கியமான பொருளாதார சீர்திருத்த முடிவுகளை மத்திய அரசு தொடர்ந்து எடுக்கும் என்றும் தெரிவித்தார். இதுவரை எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள், கடுமையான முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதைக்கு திரும்பியிருப்பதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close