
மேற்கு வங்கத்தில் வழிப்போக்கர் ஒருவரின் சாதுர்யத்தால் பயணிகள் ரயில், விபத்திலிருந்து தப்பியது.
ஹவுராவில் இருந்து டெல்லி சென்ற பயணிகள் ரயில், புர்த்வான் என்ற இடத்தில் பயணித்தபோது இருப்புப் பாதையில் விரிசல் இருப்பதை அவ்வழியாக வந்த ஒருவர் பார்த்துள்ளார். அப்போது அந்தப் பாதையில் ரயில் ஒன்று வருவதையும் அவர் கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சாமர்த்தியமாகச் செயல்பட்டு, ரயிலை நோக்கி சிவப்பு நிறத் துணியைக் காட்டினார். இதனைப் பார்த்த ரயில் ஓட்டுநர், உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த நபருக்கு ரயில்வே துறையினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.