
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டென்று வானிலை மாறி மழை பெய்தது.
சென்னையில் காலை முதல் பிற்பகல் வரை இயல்பான வானிலை காணப்பட்ட நிலையில், மதியத்திற்கு மேல் திடீரென கடும் மேகமூட்டம் சூழ்ந்தது. வடபழனி, நுங்கம்பாக்கம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் போளூரில் 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. சிவகங்கையில் 8 சென்டிமீட்டரும், பேச்சிபாறையில் 7 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.