
குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவை எதிர்த்து மிகப்பெரிய அணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸும், பாஜகவும் தேர்தல் செயல்முறைகள் குறித்து பல அரசியல் கூட்டங்களைத் நடத்தி வருகின்றன. குஜராத் ஆளும்கட்சியாக இருக்கும் பாஜகவின் செல்வாக்கு மிகுந்த இடம் என்பதால் அதைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு காங்கிரஸும், வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் பாஜகவும் உள்ளது. இதற்காக பிரதமர் மோடி தொடர்ந்து குஜராத்துக்கு பயணங்கள் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பாஜகவை எதிர்த்து குஜராத்தில் மிகப்பெரிய அணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியின் பலனாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் செல்வாக்கு வாய்ந்த அபேஷ் தாகூர் நாளைய தினம் காங்கிரஸில் இணைகிறார். அத்துடன் தலித் இனத்தலைவர் மேவானி காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதே சமயத்தில் படேல் இனத்தின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தியுள்ள ஹர்திக் படேல் காங்கிரஸில் இணைய மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.