[X] Close

எம்.எல்.ஏ., எம்.பிகளுக்கு எழுந்து நின்று மரியாதை: அதிகாரிகளுக்கு உ.பி. அரசு எச்சரிக்கை!

Uttarpradesh-Government-order-for-officials

எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் அமைச்சர்களுக்கு மரியாதை வழங்காத அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு எச்சரித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைந்த பிறகு, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆகியோர் அரசு அதிகாரிகளின் அலுவலங்களுக்கு வருகை தரும்போது, அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை தர வேண்டும் என அறிவுருத்தப்பட்டிருந்தது. ஆனால் அரசு அதிகாரிகள் யாரும் மரியாதை தருவதில்லை என எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பான புகார் மனுவை காசிபூர் மாவட்ட நீதிமன்றம் ஏற்க மறுத்ததால், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக உத்தரப் பிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் அச்சுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச தலைமை செயலர் ராஜீவ் குமார், அரசு அதிகாரிகளுக்கு கண்டனக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மரியாதை வழங்காத அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். மேலும், அரசு நிதியில் நடைபெறும் நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி யாரையும் சிறப்பு விருந்தினராக அழைத்து வரக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close