[X] Close

தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை

TN-cm-panneerselvam-Consulting-at-secretariat

ஆளும் அதிமுக இரண்டு அணியாக பிளவுபட்ட பிறகு முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று முதன் முறையாக தலைமைச்செயல‌‌கம் சென்றார். கிரீன்வேஸ் சாலை இல்லத்திலிருந்து புறப்பட்ட முதலமைச்சருடன் அவரது ஆதரவு அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் மற்றும் அவரின் ஆதரவு எம்‌எல்ஏக்களும் தலைமைச்செயலகம் சென்றனர்.


Advertisement

முதலமைச்சர் பன்னீர் செல்வம் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா, நிதித்துறை செயலாளர் ச‌ண்முகம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். கடைசியாக கடந்த 5ஆம் தேதி முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் சென்றிருந்தார். அதே தினத்தில் ‌அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதால், முதலமைச்சர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். தற்போது பொறுப்பு முதலமைச்சராக பன்னீர்செல்வம் பதவி வகித்து வருகிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close