[X] Close

தேனியில் 3 சிறுவர்களுக்கு டெங்கு பாதிப்பு

Theni-Dengue-Attack-3-Children-Admitted-in-GOVT-Hospital


தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 3 சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. 


Advertisement

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 2வயது முதல் 10 வயது வரை உள்ள மூன்று சிறுவர்களுக்கு டெங்கு காய்சல் இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டு டெங்கு காய்ச்சல் சிறப்பு பிரிவில் தீவிர சிகிக்கை பெற்று வருகின்றனர். பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த பிரகதீஷ்வரன் 2வயது, வடபுதுபட்டி சபரிநாதன் வயது 10, எ.வாடிபாட்டி மணிகண்டன் வயது 8 ஆகிய சிறுவர்களுக்கு டெங்கு உறுதி
செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் உட்பட 44க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்சலால் பாதிக்கப்பட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Advertisement

Advertisement
[X] Close