[X] Close

படேல் சமூக தலைவர்கள் பாஜகவில் ஐக்கியம்: ஹர்திக் படேலுக்கு பின்னடைவு?

Hardik-Patel---s-key-aides-join-BJP-ahead-of-Gujarat-assembly-elections

குஜராத்தில் படேல் இன சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வந்த ஹர்திக் படேலின் முக்கிய ஆதரவாளர்கள் இருவர் பாரதிய ஜனதாவில் ஐக்கியமாகியுள்ளனர்.

முன்னதாக தங்கள் கட்சியில் வந்து இணையும்படி காங்கிரஸ் தலைவர் சோலங்கி அழைப்பு விடுத்திருந்தார். எனினும் ஹர்திக் படேலின் ஆதரவாளர்களான வருண் படேல் மற்றும் ரேஷ்மா படேல் இருவரும் காங்கிரஸை புறந்தள்ளிவிட்டு அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி, துணை முதலமைச்சர் நிதின் படேல் முன்னிலையில் பாரதிய ஜனதாவில் சேர்ந்தனர். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த இருவரும் ஹர்திக் படேல் காங்கிரஸின் ஏஜென்டாக மாறிவிட்டார் என்றும் மாநில அரசை கவிழ்க்க வேணடும் என்ற நோக்கத்துடன் படேல் சமூகத்தினரின் போராட்டத்தை தவறாக வழி நடத்திச் செல்கிறார் என்றும் குற்றம்சாட்டினர்.


Advertisement

Advertisement
[X] Close