[X] Close

ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி

Hogenakkal-Cauvery-Water

ஒகேனக்கலில் 24 நாட்களுக்கு பிறகு  பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்தது.  நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக பரிசல் இயக்கவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்து. இதனையடுத்து அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதனையடுத்து தற்போது 24 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க முழுமையாக மாவட்ட நிர்வாகம் தடையை நீக்கி, பரிசல் இயக்க அனுமதித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பரிசல் ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 


Advertisement

Advertisement
[X] Close